EDUCATION RESOURCES FOR HOME SCHOOLING

வீட்டுப் பள்ளிக்கான கல்வி வளங்கள்

உலகெங்கிலும் உள்ள நாடுகள் COVID-19 நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தங்களது பள்ளிகளை மூடியுள்ளன. இதனால் 1.5 பில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் தற்போது பள்ளிக்கு செல்லமுடியாத நிலை உருவாகியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, அதிகமான நாடுகள் காலவரையின்றி பள்ளிகளை மூடுவதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நோய்த்தொற்றின் சவால்களை உலகளாவிய சமூகம் தொடர்ந்து எதிர்கொண்டு வரும் நிலையில், நீண்டகால பள்ளி மூடல்களால் ஏற்படும் தாக்கம் மற்றவரை காட்டிலும் பிற்படுத்தப்பட்ட மற்றும் நலிந்த சமூக குழந்தைகளுக்கு அதிகமாகவே இருக்கும். பல பள்ளிகள் இப்புதிய சூழ்நிலைக்கேற்ப தங்களை தகவமைத்துக் கொண்டு தொலைதூரக் கற்றலை முதன்மைப்படுத்தி செயல்படுத்தத் துவங்கியுள்ளன. இருப்பினும், உலகளவில் பெரும்பான்மையான மாணவர்கள் தொலைதூர கற்றலுக்கான போதுமான சாதனங்களோ அல்லது இணையதள இணைப்போ இல்லாமல் கற்றலிலிருந்து விடுபட்டுள்ளனர். தற்காலிகமாக வடிவமைக்கப்படும் தீர்வுகள் டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்டிருக்கும் மாணவர்களுக்கும், டிஜிட்டல் முறையில் இணையமுடியாத நிலையில் உள்ள மாணவர்களுக்கும் பொதுவாக இருத்தல் அவசியம்.

இந்த அவசரநிலையை கருத்தில் கொண்டு, EAA-வில் உள்ள புதுமை மேம்பாட்டு இயக்குநரகம், அனைத்து மாணவர்களும் கற்றல் பயணத்தைத் தடையின்றி தொடர தொடர்ந்து கற்றல் வளங்களை உருவாக்கி வருகிறது. உலகளாவிய அளவில் இணையவழி கல்வியில் இணைய முடியாமல் இருக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பள்ளிகள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்களுக்காகவும் மற்றும் இணையவழி கல்விக்கான வளங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஐடிடி மாற்று வழிகள் மூலம் டிஜிட்டல் இணைப்பு இல்லாமல் தனிமைப்படுத்தப்பட்ட சமூகங்களை எவ்வாறு அடைவது என்பது பற்றிய சிறந்த நடைமுறைகளை ஆராய்ந்து புரிந்துகொண்டு மற்றவர்களுடன் பகிரத் தயாராக உள்ளது . நீங்கள் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் அல்லது பள்ளியின் அங்கமாக இருந்தால் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். மின்னஞ்சல் முகவரிinnovations@eaa.org.qa அல்லது இந்த இணைப்பு மூலம் ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்யுங்கள்link.

இணையதளமற்ற கல்வி வள வங்கி

செயல்வழி திட்ட வங்கி ஒன்று அனைத்து பாடத்திட்டங்களை உள்ளடக்கியும், வெவ்வேறு வயதில் இருக்கும் மாணவர்களை கற்றல் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்துவதற்கு இணைய தொழில்நுட்பம் அவசியமில்லை.

இந்த செயல்திட்ட வங்கியைப் புதுப்பிக்கும் நோக்குடனும், தரமான கற்றலுக்கான அணுகலை உறுதிசெய்யவும், ஐடிடி தொடர்ந்து புதிய கருவிகளை உருவாக்கும்.

இந்த வேலை அனைத்தும் Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International Licenseகீழ் உரிமம் பெற்றது.